1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex and Nifty Snap Five-Day Losing Streak Driven by Falling Crude Oil Prices and Rupee Surge

கடந்த வாரம் முழுவதும் நஷ்டம்.. இந்த வாரத்தின் முதல் நாளே உச்சம்.. பங்குச்சந்தை நிலவரம்..

பங்குச் சந்தை
புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்த சரிவிலிருந்து மீண்டு எழுச்சி பெற்றுள்ளன.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8.5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து பீப்பாய்க்கு சுமார் 82 டாலராக குறைந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 776.01 புள்ளிகள் அதிகரித்து 76,835.78 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 228.50 புள்ளிகள் உயர்ந்து 23,995.95 என்ற புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐடி, ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் கணிசமான லாபத்தைப் பெற்றன.
 
மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 61 பைசா அதிகரித்து 95.92 ஆக வலுப்பெற்றது. மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் தணிந்ததும், உலகளாவிய சந்தைகளின் மீட்சியும் இந்திய பங்குச்சந்தையில் வாங்கும் ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அடுத்த போராட்டம் பஞ்சாபில்.. கரப்பான்பூச்சி அறிவிப்பு.. ஆம் ஆத்மி அரசு கொடுத்த ரியாக்சன்..