தொடர்புடைய செய்திகள்
- செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது!.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு..
- இலங்கையில் கூட பிரியாணி கடை வச்சிருக்கேன்!.. பாரதிராஜாதான் காரணம்!.. RR பிரியாணி ஓனர் பேட்டி...
- 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம்.. ஆர்வமுள்ள ஆன்மீகவாதிகள் விண்ணப்பிக்கலாம்...
- ஆர்.ஜே.பாலாஜிக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த சூர்யா!.. இதான் மேட்டரா!..
- சசி இல்லனா நான் இப்போ டைரக்டர் இல்ல!.. ஏ.ஆர் முருகதாஸ் ஃபீலிங்..
விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க செல்போன்களே முக்கிய காரணம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கவலை!
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தற்காலத்தில் கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்குகள் பெருமளவு அதிகரிப்பதற்கு செல்போன்களே காரணமாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
செல்போன்களின் மிதமிஞ்சிய பயன்பாடு, மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் பெரும் விரிசல்களை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய சூழலில் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் தனது நீண்டகால அனுபவத்தில் பார்த்த பல குடும்ப நீதிமன்ற வழக்குகளை குறிப்பிட்டுப் பேசிய அவர், தம்பதிகளுக்குள் விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு ஸ்மார்ட்போன்களே முக்கிய காரணியாக விளங்குகின்றன என்றார். மனிதர்களை இந்த டிஜிட்டல் சாதனங்களின் பிடியில் இருந்து மீட்பது தற்போதைய அவசர தேவையாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
