1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. college student commited sucide in tuticorin

என் அம்மாவை பத்திரமா பாத்துக்கோ!.. நண்பனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளைஞர் தற்கொலை!...

suicide
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தை குளம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்(21). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய சுரேஷ் தனது நண்பரான காளிராஜ் என்பவருக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

அதில் ‘என்னுடைய அம்மாவை நீ நல்லா பாத்துக்கோ.. நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்க.. எல்லாரும் ஹாப்பியா இருங்க; என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சந்தேகமடைந்த காளிராஜ் உடனே சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதோடு, அவரும் சுரேஷின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் சுரேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
இனிமே ஈரானுடன் போர் இல்ல!.. கையெழுத்து போட்டாச்சி!.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..