1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. centrol government provided z plus security to vijay

முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!.. ஒன்றிய அரசு அதிரடி!...

vijay
நடிகராக இருந்து ரசிகர்களால் இளைய தளபதி என அழைக்கப்பட்டவர் விஜய். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் தளபதியாக மாறினார். அதன்பின் அரசியலில் களமிறங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறினார். தற்போது நடந்து முடிந்த சட்ட தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகவும் விஜய் மாறியிருக்கிறார்..

நேற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவரோடு அந்த கட்சியின் அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுக்கொண்டனர்.  அதன்பின் தலைமைச் செயலகம் சென்ற விஜய் சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதேபோல் இன்று சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து தவெக, திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பதவியேற்று வருகிறார்கள். அதன்பின் மதியம் 2:30 மணிக்கு முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்நிலையில்தான், இன்று காலை முதலமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பிரிவு (Z+) பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. MP5 அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். முதலமைச்சர் பாதுகாப்பு குழுவில் 10க்கும் மேற்பட்ட NSG கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
தவெகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!...