1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottaiyan trying to bring some mlas from admk

தவெகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!...

sengottaiyan
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த கோபத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார் செங்கோட்டையன்..

அதிமுகவோ எதிர்கட்சியாக கூட இல்லாத நிலை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டது. ஒருபக்கம் தேர்தல் முடிவு வெளியாகி தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்கிற நிலை உருவானபோது அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற செங்கோட்டையன் முயற்சி செய்ததாக செய்திகள் வெளியானது. அதற்காகத்தான் அதிமுக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரியில் தங்க வைத்ததாகவும் சொல்லப்பட்டது..

இப்போது தவெக ஆட்சியமைத்துவிட்ட நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மேல் அதிருப்திசி ஏற்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார்கள். அனேகமாக அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் அவருக்கு 39 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. விரைவில் பழனிச்சாமியிடமிருந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, அதிமுக எம்.எல்.ஏக்களில் சிலர் தவெகவில் இணையப் போகிறார்கள் எனவும் அதில் சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப் போவதாகவும் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுகவை உருவாக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டிருக்கிறார்.. தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்காக பதவி ஆசை காட்டி ஒரு கட்சியை உடைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.. உண்மையில் அவர்தான் தீசக்தி என்று அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!.. ஒன்றிய அரசு அதிரடி!...