இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்.. நூலக ஊழல் ஆதாரங்களை அள்ளி போட்ட அமைச்சர் ராஜ்மோகன்..
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில், இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முந்தைய திமுக அரசு ஊழல் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்ச்சைக்குரிய 'அகல்விளக்கு' பதிப்பகத்திற்கு ஆணை வழங்கப்பட்டு வெறும் 7 நாட்களில் புத்தகங்கள் பெறப்பட்டு, ரூ.50 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். போலி மற்றும் தகுதியற்ற புத்தகங்களை நூலகங்களுக்கு வாங்கி குவிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் கமலாம்பாள் கருணாநிதி, ஸ்டாலின், திரிஷா விஜய் போன்ற அடையாளம் தெரியாத பெயர்களில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சாடிய அமைச்சர், இது போன்ற போலி எழுத்தாளர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
திருச்சி, கடலூர், திருநெல்வேலி நூலகங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், போலி நூல்களை கண்டறிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

