1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cbe periyar arivulagam author name is vijay trisha

போலி புத்தகங்களில் எழுத்தாளர் பெயர்களில் ‘விஜய்’.. ஒரு எழுத்தாளர் பேரு திரிஷா விஜய்....

books
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. 2026 தேர்தலில் விஜய் முதல்வரான பின் அது திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் நேரில் சென்று அந்த நூலகத்தை திறந்துவைத்தார்.  இந்நிலையில், அந்த நூலகத்தில் பல போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் பேரில் போலியான பல ஆயிரம் புத்தகங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும்,. புத்தகங்களில் பல தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன எனவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

books

இதற்கு திமுகதான் காரணம் என தவெகவும், தவெகதான் காரணம் என திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன. அகல் விளக்கும் என்கிற பதிப்பகமே இல்லை. ஆனால், அந்த பதிப்பகத்தின் பெயரில் 1800 புத்தகங்கள் இருப்பதாக பெருமாள் முருகன் கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த பதிப்பகத்தின் புத்தகங்களில் உள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்யன், சுமேகா விஜய் என இருக்கிறது. அதிலும் ஒரு எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய் என இருக்கிறது. இதை கையிலெடுத்த திமுக ஆதரவாளர்கள் இது தவெக ஆதரவாளர்கள் செய்தது என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
போலி புத்தகங்களில் ஜூன் மாத முத்திரை.. விஜய் பிறந்தநாளா?.. திமுக அட்டாக்...