1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin comment about cbe periyar arivulugam issue

நாங்க விசாரணைக்கு ரெடி.. பண்ணது தவெகதான்!.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

periyir
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் 240 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நூல்களில் பல போலியானவை, போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் பேரில் பல ஆயிரம் புத்தகங்கள் இருக்கிறது, புத்தகங்களில் பல தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன எனவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு திமுகதான் காரணம் என தவெகவும், தவெகதான் காரணம் என திமுகவும் மாறி மாறி புகார் கூறி வருகின்றன. நூலகத்தை அமைத்தது திமுக என்றாலும் ஜூன் மாதம் நிறைய புத்தகங்களை தவெக அரசு கொள்முதல் செய்துள்ளது. மேலும், அகல் விளக்கு என்கிற போலி பதிப்பகத்தின் புத்தகங்களில் உள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்யன், சுமேகா விஜய் என இருக்கிறது. அதிலும் ஒரு எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய் என இருக்கிறது. எனவே, இது தவெக செய்ததுதான் என திமுகவினர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘இந்த தவெக அரசுநிஜமாகவே எதற்கும் லாயக்கற்றது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் திமுகதான் காரணம் என சொல்கிறார்கள். சூரியன் உதிப்பது கூட திமுகவினால்தான் என்று சொல்வார்கள். அவர்களிடம் அவர்களிடம் இருக்கும் ஒரே பதில் இதுதான்..

நாங்கள் ஒரு முறையான விசாரணைக்கு தயாராக இருக்கிறோம் திமுக ஆட்சியில் இது கண்டிப்பாக நடந்திருக்காது என்று எனக்கு 100 சதவீதம் நிச்சயமாக தெரியும்.. அந்த புத்தகங்களின் பெயர்களையும் அவற்றை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எந்த ஆட்சியில் இருந்த தவறு நடந்தது என்பது மிக தெளிவாக தெரிகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி!.. தீபாவளிக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்பரைஸ்....