புதுசா டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது!.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
தமிழகத்தை பொறுத்தவரை மதுபான கடைகளை டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் தமிழக அரசே நடத்தி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இது கொண்டுவரப்பட்டது.
தவெக ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் ஜோசப் விஜய் 707 மதுபான கடைகளை மூடினார். மேலும் டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மதுப்பிரியர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது..
திருச்சி நவகிநத்துபட்டியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.. புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு எந்த தேவையும் இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.