ஒருவேளை நெதன்யாகு உயிருடன் இருந்தால் அவரை தேடி கண்டுபிடித்து கொல்வோம்: ஈரான் சபதம்
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தேடி கண்டுபிடித்து கொல்லப்போவதாக ஈரான் சபதம் ஏற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இப்போர் தொடங்கியது. தற்போது ஈரானின் புதிய தலைவராக மோஜ்தபா கமேனி பொறுப்பேற்றுள்ள நிலையில், நெதன்யாகு சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
மார்ச் 12 அன்று வெளியான நெதன்யாகுவின் வீடியோ ஒன்று செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பாக, அதில் அவரது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன. நெதன்யாகு இறந்துவிட்டதாக பரவும் தகவல்களை அவரது அலுவலகம் மறுத்துள்ள போதிலும், அவரது மகன் யாயிர் நெதன்யாகுவும் சமூக வலைதளங்களில் மௌனமாக இருப்பது மர்மத்தை அதிகரித்துள்ளது.
Edited by Siva