உடம்பு சரியில்ல.. விசாரணைக்கு வர மாட்டேன்!.. லஞ்ச ஒழிப்பு துறையிடம் சொன்ன எ.வ.வேலு..
திமுக ஆட்சியில் அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது கரூரில் ரோடு போடாமலேயே ரோடு போட்டதாக சொல்லி 3.23 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022ம் வருடம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால் எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 23ம் தேதி எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் சொன்னார்கள். மேலும், ஜூலை 3ம் தேதியான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இந்நிலையில், இதய பிரச்சனை காரணமாக சிங்கப்பூரில் உள்ள லைப் லைன் ஹார்ட் செண்டரில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என வழக்கறிஞர் மூலம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.