கோவில்களில் முறைகேடா?!.. இந்த இமெயிலுக்கு புகார் அளிக்கலாம்!...
தமிழகத்தில் தவெக அரசு அமைந்தவுடன் அறநிலைத்துறை மற்றும் கோவில்கள் தொடர்பாக அவ்வப்போது பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி கோயில் ஊழியர்கள் சிலர் பக்தர்களிடம் பணம் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர் ரமேஷ் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமாக பணம் வாங்குவது பற்றி புகார் அளிக்க [email protected] என்கிற மின்னஞ்சல் கொடுக்கப்பட்டிருக்கிறது..
கோயில்களில் வேலை வாங்கி தருவதாக சொல்லி லஞ்சம் கேட்டாலும் இந்த மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
கோயில்களில் வேலை வாங்கி தருவதாக சொல்லி லஞ்சம் கேட்டாலும் இந்த மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.