தொடர்புடைய செய்திகள்
- மின்வாரியத்திற்கு என தனியாக ஒரு வெள்ளை அறிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு
- சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை இனி வாட்ஸ்அப் மூலமே செலுத்தலாம்!
- நடிகை கௌதமியிடம் 25 கோடி ரூபாய் மோசடி வழக்கு: 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை
- பச்சையப்பன் கல்லூரியில் இனி மாணவிகளும் படிக்கலாம்.. தமிழக அரசு அரசாணை..
- சர்வதேச நகரமாக மாறும் சென்னை!.. 20 வருஷம் அட்வான்ஸா யோசிக்கும் முதல்வர் விஜய்!..
ரயில்களை நிறுத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் அதிர்ச்சி...
காவல்துறை என்னதான் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து பணியில் ஈடுபட்டாலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் குற்றங்களையும் அவர்களால் முழுவதுமாக தடுக்க முடிவதில்லை. ஏனெனில், திருடர்கள் புதுப்புது யுக்திகளை யோசித்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், சென்னையில் ரயில்களை நிறுத்தி பயணிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் 35) கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ரயில் வரும்போது சிக்னல் விளக்கை ஒரு துணியை கொண்டு மறைத்து விடுவார். நடுவழியில் ரயில் நின்றதும் அதில் ஏறி பயணிகளை மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குமரேசன் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும், பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டும் குமரேசன் இரவு நேரங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஏற்கனவே இவர் மீது 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதோபோல், குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் இருந்திருக்கிறார்.