1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay wants to change chennai to international city

சர்வதேச நகரமாக மாறும் சென்னை!.. 20 வருஷம் அட்வான்ஸா யோசிக்கும் முதல்வர் விஜய்!..

cm vijay
தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார். தவெக பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், ஒருபுறம் இந்த கட்சியின் செயல்பாடுகளை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஒருபக்கம் முதல்வர் விஜய்யோ எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் தனது முதல்வர் பணியை செய்து வருகிறார். நேற்று கூட தமிழக அரசின் நிதி நிலை குறித்து தவெக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது..

இந்நிலையில்தான், சென்னையை சர்வதேச நகரமாக்கும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை மாற்ற 3வது மாஸ்டர் திட்டத்தை தயாரிக்குமாறு அவர் சி.எம்.டி.ஏவுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த 20 ஆண்டுகளுக்கு (2026 - 2046) செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணியிலும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சென்னை நகரின் வளர்ச்சிக்காக இதற்கு முந்தைய ஆட்சியில் இரண்டு முழுமை திட்டங்கள் தயார் செய்யப்பட்டன. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது முதல்வர் விஜய் மூன்றாவது திட்டத்தை உருவாக்க சொல்லியிருக்கிறார்.  இதனையடுத்து ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை: 12-ம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்..