1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Property and Water Tax Can Now Be Paid Via WhatsApp: Chennai Corporation's New Digital Initiative

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை இனி வாட்ஸ்அப் மூலமே செலுத்தலாம்!

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய குடிமை சேவைகளை மிக எளிதாக பெறும் வகையில், இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பல்வேறு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் புதிய மைல்கல்லாக, சென்னை மக்கள் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய கட்டணங்களை வாட்ஸ்அப் செயலி வழியாகவே நேரடியாகச் செலுத்தும் புதிய அதிரடி வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இனி சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களைச் செலுத்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் தங்களின் நேரத்தைச் சேமிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட்  எண்ணான 9445061913 என்பதற்கு மெசேஜ் அனுப்பி, மிக எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கட்டணங்களைச் செலுத்திவிடலாம்.
 
இத்துடன் பிறப்பு-இறப்பு சான்றிதழ் சேவைகள், குறைகளைப் பதிவு செய்தல் மற்றும் அதனைக் கண்காணிப்பது உள்ளிட்ட 42 வகையான சேவைகளும், கட்டண விவரங்கள், ரசீதுகள், நிலுவைத் தொகைகள் குறித்த விபரங்களும் இந்த ஒரே வாட்ஸ்அப் எண் மூலம் 24 மணி நேரமும் உடனுக்குடன் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நவீன டிஜிட்டல் வசதியை சென்னைவாசிகள் அனைவரும் பயன்படுத்தி, தங்களின் வரிகளை எவ்வித காலதாமதமும் இன்றி செலுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ். சமீரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை விடுத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்!