1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. White Paper on Tamil Nadu Electricity Board Status to Be Released Next Week, Announces Minister Nirmal Kumar

மின்வாரியத்திற்கு என தனியாக ஒரு வெள்ளை அறிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு

nirmal kumar
தமிழக மின் வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் வாரியத்தின் நிலை குறித்த அறிவிப்போடு சேர்த்து பல்வேறு அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
 
அப்போது, முந்தைய ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அமைச்சர், தற்போதைய தவெக ஆட்சியில் எந்தவொரு குற்றமும் மறைக்கப்படாமல், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சணையின்றி உடனடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். 
 
அரசியல் ரீதியாக பேசிய அவர், பாஜக-வின் மறைமுக முகமாக திமுக செயல்பட்டு வருவதாகவும், செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் ஆளுநர் இன்னும் கையெழுத்திடாமல் கோப்புகள் தேங்கி கிடப்பதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் சாடினார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை விடுத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்!