1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actress Gautami Fraud Case: Enforcement Directorate Raids 6 Locations of Accused Alagappan

நடிகை கௌதமியிடம் 25 கோடி ரூபாய் மோசடி வழக்கு: 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை

கௌதமி
நடிகை கௌதமியிடம் 25 கோடி ரூபாய் மோசடி செய்த அழகப்பன் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர் . 
 
கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் கௌதமி அளித்த புகாரில், தனது குடும்ப நண்பரான வேளச்சேரியை சேர்ந்த அழகப்பன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது 25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி விற்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதன் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கேரளா திருச்சூரில் வைத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் 
 
முன்னதாக நடந்த விசாரணையில் அழகப்பன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்தது தெரியவந்தது . இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறை களமிறங்கியது 
 
தற்போது சட்டவிரோத பண பரிமாற்ற ஆதாரங்களை திரட்டும் நோக்கில், வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள அழகப்பன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் அண்ணா நகரில் உள்ள அவரது நண்பர் வீடு என சென்னையில் 3 இடங்களிலும், அதுமட்டுமின்றி மதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அழகப்பன் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்  
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சர்ச்சையை தவிர்த்த தவெக!.. தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய சட்டசபை!..