1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk party member commited sucide

மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..

admk
2021 மற்றும் 2026 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது. இது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒருபக்கம், சி.வி சண்முகம் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் தனி அணியாக பிரிந்து தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
 
அதோடு அதில் நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். எனவே அதிமுகவின் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற அச்சம் அதிமுக தொண்டர்களிடம் எழுந்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டியே என விஜய் விஜய் தொடர்ந்து சொல்லிவந்தார். தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையும் அப்படியே மாறிவிட்டது. எதிர்காலத்தில் அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பு அமைவதே சந்தேகம்தான் என பலரும் கூறி வருகிறார்கள்..
 
இந்நிலையில்தான், அதிமுகவின் தோல்வி மற்றும் உட்கட்சி பூசல் ஆகியவற்றால் மன உளைச்சல் அடைந்த கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த பூக்கடை மகேந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் அந்த பகுதியில் அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளராக இருந்தார்
.
 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில் ‘அதிமுக ஒன்றிணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும். நமது இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் நிறைய விஷயங்கள் எனக்கு மன வேதனையை தருகிறது. எனது இறப்பிற்கு பின்னால் அதிமுக மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஒன்றிணைந்து அம்மா ஆட்சி அமைய வேண்டும்.. அனைத்து தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தார்.
 
அடுத்த கட்டுரையில்
இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..