1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp annamalai resigned his job in bjp

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை!.. டெல்லியில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

annamalai
தமிழக பாஜக தலைவராக பலர் இருந்தாலும் மக்களிடம் பிரபலமானவர் அண்ணாமலை மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர்தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்தது. தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்ததற்கு அண்ணாமலைதான் முக்கிய காரணம். தினமும் செய்தியாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது, திமுகவை கடுமையாக விமர்சிப்பது, தேவைப்பட்டால் அதிமுகவையும் விமர்சிப்பது என ஒரு சிறந்த தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வலம் வந்தார்..
 
ஆனால் பழனிச்சாமியின் கோபத்தை சம்பாதித்ததால் அவரிடமிருந்து கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் கொடுக்கப்பட்டது. இது அண்ணாமலைக்கு அதிருப்தியை கொடுத்தது. மேலும், அண்ணாமலைக்கு எந்த ஒரு உயர் பதவியும் கொடுக்கப்படவில்லை. இதனால், பாஜக மீது அதிருப்தியடைந்த அண்ணாமலை ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க திட்டமிட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து டெல்லி மேலிடம் அவரை நேரில் வந்து சந்திக்குமாறு கூறியது. அதையேற்று நேற்று சென்னையிலிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி சென்றார். வழக்கமாக பாஜக கொடி கட்டப்பட்டிருக்கும் காரில் வரும் அண்ணாமலை நேற்று பாஜக கொடி இல்லாத காரில் விமான நிலையத்திற்கு வந்தார். 
 
மேலும் செய்தியாளர்கள் விமான நிலையத்தில் ‘புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா?’ என்று கேட்டதற்கு ‘இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்.. நானே உங்களிடம் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார் அண்ணாமலை. இந்நிலையில், டெல்லி சென்ற அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கொடுத்தார். அமித்ஷா அவரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, விரைவில் அண்ணாமலை புதிய கட்சியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.