தொடர்புடைய செய்திகள்
- பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை!.. டெல்லியில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
- அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..
- ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...
- மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..
- ஒரு வார்த்தை சொல்லியி்ருந்தா விஜய் வீடு தேடி வந்திருப்பார்!.. பிரேமலதா பேட்டி!...
சாதி மதம் பார்த்துதான் சீட்டே கொடுத்தீங்க!. நீங்க சாதி மதத்தை ஒழிச்சிட்டீங்களா?!...
தமிழக முதல்வர் விஜய் நேற்று திருச்சிக்கு சென்று மக்கள் முன்பு உரையாற்றினார் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றி சொல்வதற்காகவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கம் போல பிரச்சாரம் ஸ்டைலிலேயே விஜய் பேசினார். அப்போது மற்ற கட்சிகள் போல் தவெக இல்லை.. ஜாதி, மதம் பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம் என்று அவர் கூறியிருந்தார். இதை பல அரசியல் பிரபலங்களும் விமர்சித்து வருகிறார்கள்..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு ஜாதி, மதம், ஊழலை ஒழித்து விட்டதாக தம்மட்டமடிக்கும் முதல்வரே.. மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் உங்கள் வேட்பாளர் யார்? இதில் ஜாதி, மதம் இல்லையா? திருச்சி கிழக்கு வேட்பாளராக தங்கள் போட்டியிட்டீர்களே!.. அதில் மதம் இல்லையா? தமிழ்நாடு முழுவதும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை பார்த்தாலே தெரியும் இதில் ஜாதி மதம் செழித்து வளர்ந்திருப்பது தெரிய வருகிறது என அவர் கூறியிருக்கிறார்.
ஒருபக்கம் காரைக்குடி, ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, சிவகாசி, குளச்சல், கிள்ளியூர், திருநெல்வேலி, நாங்குநேரி, நாகர்கோயில் போன்ற பல தொகுதிகளிலும் சாதி பார்த்துதான் தவெக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள் என திமுகவினர் புள்ளிவிவரத்தோடு சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
