தொடர்புடைய செய்திகள்
- ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?
- இனி பள்ளிகளில் ஆன்லைன் முறையில் கட்டண வசூல்? - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
- முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?
- திமுகவுக்கு அல்வா!. இந்தியா கூட்டணியில் தவெக?.. ராகுல்காந்தி போடும் ஸ்கெட்ச்!..
- 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்!.. சுகாதாரத்துறை கெடுபிடி!...
கல்வி கட்டணம் வெளிடையாக தெரிவிக்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. இதுதான் மாற்றம்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் தனியார் பள்ளிகளும் தங்களின் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த முக்கிய சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நர்சரி, பிரைமரி மற்றும் இதர பிற பள்ளிகள், கட்டண நிர்ணய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வகுப்புவாரியான கல்விக்கட்டண விவரங்களை பொதுமக்களின் பார்வைக்காகத் தகவல் பலகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலும், அந்தந்த பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் இந்த விபரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களிலும் வகுப்புவாரியான கட்டண விவரங்களை அச்சடித்து வழங்க வேண்டும்.
வரும் ஜூன் 5ஆம் தேதிக்குள் இந்த நடைமுறையை பூர்த்தி செய்து, புகைப்பட ஆதாரத்துடன் கூடிய அறிக்கையை ஜூன் 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் அல்லது மறைமுக கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
Edited by Siva
