1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy request tn governor on tvk

குதிரை பேரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்!.. ஆளுநரிடம் அதிமுக அழுத்தம்!...

eps vijay
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து 3வது இடத்திற்கு சென்றது. அதோடு, தொடர் தோல்வி காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் தலைமை மீது அதிருப்தியடைந்த சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர். இதனால், சிவி சண்முகம் வீட்டிற்கே சென்று முதல்வர் விஜய் நன்றி கூறினார். இதை திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதுவும் பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதாக பழனிச்சாமி குற்றம் சாட்டினார். ஒருபக்கம், மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான், அதிமுக எம்.எல்.ஏ மற்றும் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை ஆளுநர் அர்லேகரை சந்தித்து அதிமுக பொதுச்செயாளர் பழனிச்சாமியின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதில், தவெகவின் குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. எம்.எல்.ஏக்களை விலை பேசும் தவெக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.. ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்.எல்.ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?!.. குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி!..