தொடர்புடைய செய்திகள்
- ’அண்ணாமலை அன்பு கூட்டம்’ என்ற பெயரில் நற்பணி மன்றம்.. கோவையில் பரபரப்பு..
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக ஆதரவா? பாஜகவிடம் நெருங்குகிறதா திமுக?
- 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்பு!. மம்தா பேனர்ஜு கூடாரம் காலியாகிவிட்டதா?..
- பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...
- டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?
முதல்வர் விஜய்யை போலவே அண்ணாமலையை சந்திக்கவும் நேரம் ஒதுக்காத அமித்ஷா? உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை
தமிழக முதல்வர் விஜய்யை சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காத நிலையில், பாஜகவிலிருந்து விலக அண்ணாமலை முடிவெடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அவரையும் அமித்ஷா இதுவரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையை சமாதானம் செய்ய பாஜகவின் தேசிய பொறுப்புகள் மற்றும் ராஜ்யசபா எம்பி பதவி போன்ற அனைத்து சலுகைகளையும் அண்ணாமலை நிராகரித்து விட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அமித்ஷாவை சந்தித்து தனது இறுதி முடிவை நேரில் தெரிவிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், டெல்லியில் முகாமிட்டுள்ள அவருக்கு இதுவரை தலைமை செயலக தரப்பிலிருந்து அனுமதி கிடைக்காததால் அண்ணாமலை உச்சகட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவினரால் அண்ணாமலை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால், அதிருப்தியின் எல்லைக்கே சென்றுள்ள அண்ணாமலை, டெல்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு விரைவில் தமிழகம் திரும்பி, தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
