தொடர்புடைய செய்திகள்
- பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...
- திருச்சியில் விஜய்!.. QR கோட் கட்டாயம்!.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!..
- இனிமே திரிஷா கூட வந்தா ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் பண்ணுவோம்!. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!...
- முதல்வர் விஜயுடன் செல்பி!.. யார் இந்த ஜெகதீஷ் அவஸ்தி?!.. பரபர அப்டேட்!...
- பெரிய ஓட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.. பொங்கல் சூப்பரா இருக்குது.. அம்மா ஆட்சியில கூட இப்படி இருந்ததில்லை.. அம்மா உணவக பயனர்கள்..
இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..
தற்போதைய முதல்வர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்ற போது அவரை காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். விஜய் கரூருக்கு சென்றபோது இரவு 7 மணியாகிவிட்டது. அங்கு 20 ஆயிரத்திற்கும் மேல் கூடியிருந்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலரும் நெரிசலில் சிக்கினர். இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் விஜய், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய தவெக நிர்வாகிகளும், கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். விஜய் இரண்டு முறை டெல்லி சென்று நேரில் வாக்குமூலம் அளித்தார். ஆனால், சிபிஐ கரூர் சம்பவம் தொடர்பான அறிக்கையை எப்போது வெளியிடும் என யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இயக்குனர் அமீர் கரூர் சம்பவம் மிகப்பெரிய அநீதி.. உண்மை குற்றவாளி யார்? அதை செய்தது முந்தைய ஆட்சியாளர்கள்தான் என்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அல்லது நடக்காத ஒன்றை நடந்ததாக நீங்கள் சொன்னீர்களா? இப்போது உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது.. நீங்கள் கேட்பதை செய்து கொடுக்க ஒன்றிய அரசின் சிபிஐயும் தயாராக இருக்கிறது.. தயவு செய்து கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.
