எதிர்கட்சியா கூட வரலயே!.. பழனிச்சாமி மீது அதிருப்தியில் அதிமுக.. அணி மாறுகிறார்களா?..
எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டது அதிமுக. திமுகவிலிருந்து பிரிந்து வந்து அதிமுக என்கிற கட்சியை துவங்கி 1977ம் வருடம் சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் போட்டியிட்டார். அதில், அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிலிருந்து தொடர்ந்து 3 முறை அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆரே முதல்வராக இருந்தார். அவருக்கு பின் ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றி அக்கட்சியை சிறப்பாக வழிநடத்தினார். கலைஞர் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்து அதில் வெற்றிபெற்றும் காட்டினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கு சென்றது. ஆனால், 2021 சட்டமன்ற தேதல், 2024 பாரளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதுவும் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக 3ம் இடத்திற்கு சென்று எதிர்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை பெற்றுவருவது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய தோல்வி மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் பழனிச்சாமி தலைமையின் கீழ் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம், தவெவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றியும் சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.