1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 மே 2026 (12:46 IST)

முதல்வரானதும் விஜய் போடும் முதல் கையெழுத்து!.. இது செம அப்டேட்!..

vijay
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக போன்ற 60 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி கட்சி துவங்கிய இரண்டே வருடங்களான தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. அந்த கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது..

அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் ஆளுநர் எம்எல்ஏக்களின் ஆதரவை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இதையடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது..

இதில் தமிழக காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. அனேகமாக விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் தவெகவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் விஜய் முதலமைச்சராகி பதவியேற்ற பிறகு வெற்றி பயணித்திட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் முதல் கோப்பில் கையெழுத்திடவுள்ளார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழகமெங்கும் பெண்கள் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது...