1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 மே 2026 (12:37 IST)

தவெக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது!.. நிபந்தனையற்ற ஆதரவு!..

vijay rahul
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடந்தது சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரம் இந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எனவே காங்கிரஸ், விசிக போன்ற சில கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக கடிதம் எழுதியிருக்கிறது.  தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக இன்று காலை சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. முடிவில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்க காங்கிரஸ் முன்வந்திருக்கிறது.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் சந்தித்து 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுக்கவிருக்கிறார். அதோடு, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திடவிருக்கிறார்கள். தவெக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியிருப்பதால் இன்னும் சற்று நேரத்தில் விஜய் பனையூருக்கு வரவிருக்கிறார். அங்கு விஜயை சந்தித்து 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுக்கவிருக்கிறார்.. இதையடுத்து தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்திருக்கிறது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியிருப்பதால் விஜய் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களும் உடன் இருப்பார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.