1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rahul worked fast more than bjp and joined tv

பாஜகவை முந்தி காய்நகர்த்திய காங்கிரஸ்!.. விஜயுடன் கைகோர்த்த ராகுல்!..

momdi rahul vijay
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான வேலைகள் துவங்கிய போதே விஜய்க்கு மக்களிடமும், இளைஞர்களிடமும் இருக்கும் ஆதரவை பார்த்துவிட்டு தவெகவுடன் கூட்டணி அமைக்கவே ராகுல் காந்தி ஆசைப்பட்டார். தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையும் நடத்தியத்கு. ஆனால் கட்சியில் பல முக்கிய தலைவர்கள் திமுகவுடன் செல்வதே சரி என சொன்னதால் வேறு வழியின்றி அவரும் திமுகவுடன் கூட்டனிக்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதோடு திமுகவும் தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில்தான் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன் வந்திருக்கிறது. அதாவது காங்கிரஸின் 5  எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது விஜய்க்கு கிடைத்திருக்கிறது. இதனால் தவெகவை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்திருக்கிறது

எனவே, இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே விஜய்க்கு தேவை. தவெகவுடன் கூட்டணிக்கு அமைக்க பாஜக மேலிடம் முயற்சி செய்த நிலையில் அவர்களை விட வேகமாக காயை நகர்த்தி விஜயுடன் ராகுல் காந்தி கை கோர்த்துவிடார். இதையடுத்து திமுகவுடன் பல வருடங்களாக நீடித்து வந்த கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸுடன் கை கோர்த்த விஜய்!.. இந்தியா கூட்டணியில் நுழையும் தவெக!..