1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Last Modified: புதன், 6 மே 2026 (13:44 IST)

விஜய் ஆட்சி அமைக்கும் நிலையில் திடீரென ஸ்டாலினை சந்தித்த ரஜினி!.. பரபரப்பு!..

rajini stalin
நடிகர் விஜய் தமிழகத்தில் முதலவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கவிருக்கிறது. ஆட்சி அமைக்க 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி தவெவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறது. இதனால் விஜய்க்கு மேலும் 5 எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு தேவை என்கிற நிலையில் விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார்.

இன்று மாலை 3.30 மணியளவில் விஜய் ஆளுநரை சந்தித்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்கவிருக்கிறார். தமிழக அரசியல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினி முக ஸ்டாலினை சந்தித்திருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். அதுவும், தவெக வேட்பாளரிடம் அவர் தோல்வியை சந்தித்தார். எனவே, முக ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்வதற்காகவே ரஜினி அவரை சந்தித்திருப்பதாக சொல்லப்படுகிறது.