1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk join in india alliance soon

காங்கிரஸுடன் கை கோர்த்த விஜய்!.. இந்தியா கூட்டணியில் நுழையும் தவெக!..

momdi rahul vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 108 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. எனவே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இன்று மாலை 3:30 மணிக்கு அவர் ஆளுநரை நேரில் சந்திக்கவிருக்கிறார்.. அதேநேரம், தவெக ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏக்களை தேவை.

தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என ஆளுநர் கூறியிருப்பதால் தற்போது மற்ற கட்சிகளிலிருந்து எம்எல்ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது. இதில் முதல் கட்சியாக காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய்க்கு கொடுக்க முன் வந்திருக்கிறது. இதையடுத்து பல வருடங்களாக திமுகவுடன் காங்கிரஸுக்கு நீடித்து வந்த கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. இது திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..

ஏனெனில் தேசிய அளவில் திமுக, காங்கிரஸ், திரிநாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில ட்சிகள் இந்தியா என்கிற பெயரில் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறது. ஆனால் தற்போது திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகி தவெக பக்கம் சென்றுவிட்டது. இதையடுத்து இந்தியா கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வரும் முயற்சியை ராகுல் காந்தி எடுப்பார் என தெரிகிறது. இதன் மூலம் தேசிய அளவில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
விஜய் ஆட்சி அமைக்கும் நிலையில் திடீரென ஸ்டாலினை சந்தித்த ரஜினி!.. பரபரப்பு!..