1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk is ready to help vijay sethupathi on vijay issue

விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்!.. களத்தில் இறங்கிய அதிமுக...

eps vijay sethupathi
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தவெ ஆட்சியின் மீதும் முதல்வர் ஜோசப் விஜய் மீதும் எதிர்க்கட்சியான திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சி எழுப்பும் எந்த கேள்விகளுக்கும் விஜய் பதில் சொல்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி ‘தலைமை பண்பு என்றால் என்னன்னே தெரியாமல் வாய்க்கு வந்ததை வாக்குறுதிகளாக கொடுத்துவிட்டு.. பிரச்சனைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மீது பழியை தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து தெறிச்சு ஓடுவது என்பது தலைமை பண்புக்கான தகுதி இல்லை.. அதை ஏமாத்தற வேலை’ என கூறியிருந்தார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு டாஸ்க் தொடர்பாக பேசியிருந்தாலும் மறைமுகமாக அவர் நடப்பு அரசியலையும், முதலமைச்சர் விஜயையும் விமர்சித்து பேசியிருக்கிறார் என தவெக ஆதரவாளர்களு,ம் விஜய் ரசிகர்களும் நம்புகிறார்கள். இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை அவர் திட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக எம்பி இன்ப துரை தனது எக்ஸ் தளத்தில் ‘நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையை பாதுகாக்க சட்டரீதியாக துணை நிற்போம்’ என பதிவிட்டிருக்கிறார். அதாவது விஜய் சேதுபதி மீது தவெகவினர் புகார் கொடுத்தாலோ, வழக்கு தொடர்ந்தாலோ அவருக்கு ஆதரவாக அதிமுக நிற்கும் என்பது போல அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்..

திமுகவின் ஆதரவாளராக விஜய் சேதுபதி பார்க்கப்படும் நிலையில் அதிமுக அவருக்கு உதவி செய்ய முன் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இதயம், சிறுநீரகத்தில் தையல் ஊசி எப்படி வந்தது? அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆச்சரியம்..