தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்ஷன் இதுதான்!..
ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜய் 2 வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். மேலும், நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களை சந்தித்தபோது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என பேசியிருந்தார்.
இதையடுத்து, தனுஷ் விரைவில் அரசியலுக்கு வருவார் என செய்திகள் வெளியானது. அதேபோல், 2 நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்று ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது, இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் வெளிப்புறம் அரசியல் மாநாடு போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், தனுஷை போலவே சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்களிடம் மக்கள் பணி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம். அது அவர்களின் சுதந்திரம் என கூறியிருக்கிறார்.

