ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்
சமீபகாலமாகவே ஏர்டெல், ஜியோ போன்ற செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் தொகையை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. குறைந்தபட்சம் 200 ரூபாய் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய முடியாது என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
இந்தியாவில் பல மாநிலங்களிலும் பயனாளர்கள் பெரும்பாலும் ஏர்டெல் அல்லது ஜியோ இரண்டில் ஏதேனும் ஒரு நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது Postpaid திட்டங்களுக்கான ரீசார்ஜ் தொகையை ரூ.50 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவிருக்கின்றன. இந்த அனைத்து திட்டங்களுக்கும் வருடத்திற்கு ஒரு இலவச international roaming கூடுதலாக அளிக்கப்படவிருக்கிறது.