விஜய் சேதுபதி சொன்னது விஜயதான்னு அவங்களுக்கே தெரியுது!.. ஜேம்ஸ் வசந்தன் நக்கல்!..
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. எனவே, அவரை திட்ட துவங்கிவிட்டனர். இந்நிலையில், தவெகவையும், முதல்வர் விஜயையும் தொடர்ந்து விமர்சித்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
லீடர்சிப்னா என்னன்னே தெரியாம, வாய்க்கு வந்தமாதிரி வாக்குறுதிகளை அள்ளிக்குடுத்துட்டு, பிரச்சனைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியைத் தூக்கிப் போட்டு, அங்கருந்து தெறிச்சி ஓடுறதுன்றது ஒரு தலைவருக்கான குவாலிட்டி இல்ல. அது ஏமாற்று வேலை..
அப்படின்னு பிக்பாஸ் வீட்டில் அந்த வாரத் தலைவராக பெரும்பான்மையானப் போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு எதிரணியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல், பதவியின் சுமை தாங்கமுடியாமல் அதை ராஜினாமா செய்த ஷாதிகாவிடம் சொல்கிறார் விஜய் சேதுபதி.
இதை உடனே பெருத்த அவமானமாக உணர்ந்து சேதுபதியைப் பற்றி அசிங்கசிங்கமாக (அந்த பக்தர்களின் வழக்கம்) திட்டி சமூக வலைதளங்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் - தூய கட்சியின் தூய தூதுவர்கள். இதில் நமக்கெல்லாம் என்ன ஆறுதலென்றால், இதைப்போன்ற பொதுவான கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் தகுதியானவர் அவர்கள் அண்ணன் மட்டுமே என்று அவர்கள் உறுதியாக நம்புவது.
இந்த உண்மை நம்மை விட விஜய்யின் ஆதரவாளர்களுக்கு நன்கு தெரிகிறது என்பது அவர்களே அதை உணர்ந்துவிட்டார்கள் என்பதின் வெளிப்பாடுதானே? நல்ல மாற்றம் வரும். காத்திருப்போம்! இடைத்தேர்தல் முடிவுகள் அதன் தொடக்கமாயிருக்கலாம் என பதிவிட்டிருக்கிறார்.