1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna said tvk will destry curruption

ஒரு வாரத்தில் எல்லா துறைகளிலும் ஊழலை ஒழித்துவிட்டோம் - ஆதவ் அர்ஜுனா!..

adhav arjuna
தமிழக அரசியல்வாதிகள் ஊழலில் கொழுத்தவர்கள்.. ஊழலை ஒழிக்கவே முடியாது.. குறிப்பாக அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதை தடுக்கவே முடியாது என்பதுதான் பொதுமக்களின் மனநிலையாக இருக்கிறது. தமிழகத்தில் என்னென்ன துறைகள் இருக்கிறதோ எல்லா துறைகளிலும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கிறார்கள்.

அந்த பணத்தில் தங்கள் குடும்பத்தையும் சொகுசாக வாழ வைக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில்தான் தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்..

எனவே நீங்கள் இலவசங்களை கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. தமிழகத்தை ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஒரு மாநிலமாக மாற்றுங்கள் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘கடந்த ஒரு வாரத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டதுதான் தமிழக அரசின் சாதனை. 60 நாட்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம்.. மிகப்பெரிய நிர்வாக மாற்றம் இருக்கும்.. பல்வேறு துறைகளில் 35 சதவீதம் வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம்.

இனிமேல் தூர் வராமல் வாரியதாக பில் போட முடியாது. பினாமி பில் முறையை ஒழிப்போம். தவறுகளை கண்டறிந்து வருகிறோம்.. விரைவில் மாற்றுவோம்.. சி.எம்.டி.ஏ-வில் கமிஷன் வாங்குவதை ஒழித்துள்ளோம்.. கட்சி நிதி, முதல்வர் நிதி என்ற பெயரில் வாங்கப்பட்டு வந்ததை ஒழித்துள்ளோம். டாஸ்மாக்கில் ஊழல் என்பதை ஒழித்துள்ளோம் டெண்டர் கோருவதிலும் ஊழல் நடைபெறுவதை ஒழித்துள்ளோம். டாஸ்மாக்கில் அமைச்சருக்கான Fund ஒழிக்கப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்.