உதயநிதி நல்லா கதறுங்க!. ஜாலியா இருக்கு!.. கஸ்தூரி நக்கல்!...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக மாறியிருக்கிறார். அதோடு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக வெற்றி பெற்றது. ஒருபக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களித்தனர். எனவே அதிமுக இரண்டாக உடைந்தது போல ஒரு தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான பஞ்சாயத்து அதிமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறது..
ஆனால் விஜய் அமைதியாக தனது முதல்வர் வேலையை பார்த்து வருகிறார். ஒரு அரசு அதிகாரி போல காலை 9:30 மணியிலிருந்து 10 மணிக்குள் தலைமைச் செயலகம் வந்துவிடும் முதல்வர் விஜய் மாலை 4 மணிக்கு வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். தினமும் பலரையும் சந்திக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஒருபக்கம் தங்களின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவும் புலம்பி வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தவெக இன்ஸ்டாகிராம் மூலம்தான் வெற்றி பெற்றது என தொடர்ந்து கூறி வருகிறார்கள். குழந்தைகளை பயன்படுத்தி தவெக வாக்கு வாங்கி விட்டது என ஸ்டாலினும், உதயநிதியும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதோடு இன்னும் சில மாதங்கள்தான் இந்த ஆட்சி நீடிக்கும். மீண்டும் திமுக ஆட்சி அமையும் வென்றெல்லாம் அவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி திமுக தோற்றாலும் நடப்பது திமுக ஆட்சிதான் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறுகிறார்.. இது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதைப் போல் இருக்கிறது.. தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதயநிதி கதறுவதை பார்த்து நாம் ரசிக்கலாம். அதற்காகவே நான் விஜய்க்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.