1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Politicians Should Send Their Kids to Village Schools for a Day to Understand Rural Hardships: CJP Founder Abhijit Dipke

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அபிஜித் திப்கே
மகாராஷ்டிராவில் கிராமப்புற மாணவர்களின் கல்வி சிக்கல்களை ஆட்சியாளர்கள் உணரும் வகையில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது குழந்தைகளை ஒரு நாள் கிராமத்து பள்ளிகளுக்கு அனுப்பி, அவர்களை நடந்து செல்ல வைக்க வேண்டும் என 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜித் திப்கே வலியுறுத்தியுள்ளார். 
 
ஹிங்கோலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தொலைதூர பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பல கிலோமீட்டர்கள் நடந்து செல்வதை சுட்டிக்காட்டினார். தேர்தல் கூட்டங்களுக்கு பேருந்துகளையும் ரயில்களையும் ஏற்பாடு செய்யும் அரசியல்வாதிகளால், ஏழை மாணவர்களின் பள்ளி பயணத்திற்கு ஒரு பேருந்தை கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
 
மழைக்காலங்களில் சேறும் சகதியுமான பாதைகளில் மாணவர்கள் படும் அவஸ்தைகளை குறிப்பிட்ட அவர், பழங்குடியினர் மற்றும் ஏழை மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற உண்மையான பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டு, சாதி மற்றும் மத மோதல்களே அரசியல்வாதிகளால் முன்னிறுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
 
கிராமப்புற பள்ளிகளின் நிலையை மேம்படுத்துவதற்காக 'ஸ்கூல் திக் கரோ'  இயக்கத்தை அவர் தொடங்கியுள்ள நிலையில், அரசின் மெத்தன போக்கிற்கு எதிராக குரல் கொடுத்து வருவது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த கணவன், மகனை கொன்ற பெண்.. கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்...