விதிமுறைகளை மீறினா கல்குவாரிக்கு சீல்!.. தவெக அமைச்சர் பிரபு எச்சரிக்கை!...
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் விஜய் மாறியிருக்கிறார். விஜய் முதலமைச்சராக பதவியேற்றது முதலே ஒரு அரசு அதிகாரி போல தலைமைச் செயலகத்திற்கு காலை 10 மணிக்குள் சென்று விடுவது, மாலை 4 மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்புவது என தன் முதலமைச்சர் பணியை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார். அவரின் இந்த நடவடிக்கைகளை பலரும் பாராட்டி வருகிறார்கள்..
ஒருபக்கம் புதிய ஆட்சி வந்திருக்கும் நிலையில் பல்வேறு துறைகளிலும் இருக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பல முறைகேடான கல்குவாரிகள் செயல்படுகிறது. இதை தவெக அரசு ஒழிக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கடந்த ஆட்சியில் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்குவாரியை படம் எடுப்பதற்காக சென்ற செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்டார். ஆனால் அந்த எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. கனிம வளத்துறை அமைச்சராக பிரபு பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரபு அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் கல்குவாரிகள் உடனடியாக மூடப்படும் என எச்சரிக்கை செய்திருக்கிறார். விதிகளை மீறும் கல்குவாரி உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்வாரிகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.. அதோடு, சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் குறித்த விவரங்களையும் திரட்ட போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.