தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த நிர்வாகிகள் முதன்முறையாக எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் மாறியிருக்கிறார்கள். விஜயின் அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர மற்ற எல்லோரும் புதியவர்கள்.
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி செய்தியாளர்களிடமும், பொதுக்கூட்டங்களிலும் பேசும்போது தவெகவில் யார் எம்.எல்.ஏக்கள் என முதலமைச்சருக்கே தெரியாது என நக்கலடித்து வருகிறார்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தவெகவில் வெற்றி பெற்றவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் இல்லை. மன்னர் ஆட்சியின் பிள்ளைகள் இல்லை. ஏழைகள், எளிமையானவர்கள், சாதி பலமற்றவர்கள், மத பலமற்றவர்கள். எங்கள் பெயர் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, ஏழைகளுக்கும் எங்கள் பெயர் தெரியும் என பதிலடி கொடுத்திருக்கிறார்.