30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...
தமிழக அரசு மருத்துவமனைகளில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்குக் கட்டணமின்றி முழுமையான உடல்நல பரிசோதனை செய்யும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நலம்-ஒருங்கிணைந்த இலவச உடல்நலப் பரிசோதனைத் திட்டம்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் பொதுமக்கள் தங்களது உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக 14 வகையான முக்கிய மருத்துவ பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
பொதுமக்களிடையே அதிகரித்து வரும் தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவப் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளிலேயே எளிதில் பெற்றுக்கொள்ள இது வழிவகை செய்யும்.
அரசின் இந்தச் சுகாதார முன்னெடுப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
