1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor simbu opened the savuku shankar new office

சவுக்கு சங்கர் அலுவலகத்தை திறந்துவைத்த சிம்பு!.. வைரல் போட்டோஸ்!..

str savukku
கடந்த பல வருடங்களாகவே ஆளும் கட்சி பற்றி பரபரப்பான தகவல்களை தெரிவித்து பல அரசியல்வாதிகள் சோதனைக்கு உட்படுத்தபட்டதற்கு காரணமாக இருந்தவர் சவுக்கு சங்கர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் வேலை செய்தவர் என்பதால் அதிகாரிகள் மூலமாக தகவல்களை பெற்று தன்னுடைய யுடியூப் சேனலில் பேசி வருகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது பல ஊழல்களை சவுக்கு சங்கர் வெளியே சொன்னார்.

இதனால் பலமுறை இவர் கைது செய்யப்பட்டார். இவரின் வீட்டில் மலத்தை ஊற்றினார்கள். சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரின் தாயாரும் மரணமடைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பின் சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.

str savukku

தற்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை சவுக்கு சங்கர் பேசி வருகிறார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் புதிய அலுவலகத்தை நடிகர் சிம்பு திறந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சவுக்கு மீடியா தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மேகமலையில் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.. இல்லையேல் துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும்; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை