1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. savukku shankar son passed away today

சவுக்கு சங்கரின் மகன் தற்கொலையா?.... நெட்டிசன்கள் ஷாக்!...

savukku shankar
அரசு பணியில் இருந்து அரசுக்கு எதிராகவே செயல்பட்டதால் அந்த பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் சங்கர். அதன்பின் சவுக்கு என்கிற இணையதளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார். மக்களுக்கு தெரியாத பல தகவல்களை தனக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தி வந்தார். இதனால், அரசியல் கட்சிகளின் எதிரியாக சவுக்கு சங்கர் மாறினார்.

டிவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த சவுக்கு சங்கர் யுடியூப்பில் தொடர்ந்து அரசியல் தொடர்பான விவாதங்களை செய்து வந்தார். குறிப்பாக 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

2026 தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தபின் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசி வருகிறார். இந்நிலையில்தான், அவரின் மகன் தியோ ஆழிசை மரணமடைந்துவிட்டார்.

ஒழுங்காக படிக்கவில்லை என அவரின் தாய் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொர்க்கத்தில் என் தாய் மகனை பார்த்துக்கொள்வார் என சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அப்போது எல்லாம் மது குடிக்கும் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது அதற்கு காரணம் ஒவ்வொரு ஊரிலும் அரசியல் நடத்தும் டாஸ்மார்க் வந்து விட்டது எனவே இளைஞர்கள் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் மது உடல் நலத்திற்கு கேடு குடி