1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. director shankar wrote the story for rajini

முதல்வன் படத்தில் நடித்திருந்தால் விஜய் இருக்கும் இடத்தில் ரஜினி இருப்பார் - சவுக்கு சங்கர்

rajini vijay
நடிகர் ரஜினிகாந்த் 1996ம் வருடம் பாட்ஷா பட விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது மட்டும் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் முதலமைச்சராகி இருப்பார்.

ஆனால் அவரோ திமுகவுக்கும், தமிழ் மாநில காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி ஏற்ப்படுத்தி அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தார். இதனால் அந்த கூட்டணி வெற்றிபெற்று கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார். அதன்பின் 25 வருடங்கள் தான் நடிக்கும் படங்களில் அரசியல் ரீதியாக காட்சிகள் வைப்பது, வசனங்களை வைப்பது என அதிரடி காட்டினார். தேவைப்படும் நேரத்தில் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிக்கொண்டே இருந்தார். 2021ம் வருடம் நான் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார். ஆனால் கொரோனா காலத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதிலிருந்து பின் வாங்கினார்..

சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ‘முதல்வன் படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் ரஜினிக்காகவே எழுதினார். 1999ம் வருடம் திமுக ஆட்சியில் இருந்தபோது அந்த படம் வந்தது. அந்த படத்தின் ரகுவரன் கதாபாத்திரம் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி மாதிரியே இருருந்தது..

ஒருவேளை ரஜினி அந்த படத்தில் நடித்திருந்தால் அவரின் தலையெழுத்து மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் தலையெழுத்தும் மாறியிருக்கும். இன்று விஜய் பெற்ற இடத்தை அவர் அடைந்திருப்பார். ஆனால் கலைஞரை எதிர்த்து அரசியல் செய்யும் தைரியம் ரஜினிக்கு அப்போது இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விவசாய குடும்பம் to Gen Z அடையாளம்!.. யார் இந்த அபிஜித் தீப்கே?..