1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor sathyaraj says his support to dmk

விஜய்க்கு வாழ்த்து!. ஆனா திமுகவுக்குதான் என் சாப்போர்ட் - மீண்டும் ஏழரை இழுக்கும் சத்யராஜ்..

sathyaraj
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவுள்ளது. கடந்த 50 வருடங்களுக்கும் மேல் தமிழகத்தில் கோலோச்சி வந்த திமுக, அதிமுக போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் முதலிடத்திற்கு வந்திருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வந்தபோது திரையுலகில் உள்ள சீனியர்கள் நடிகர்கள் கூட விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆதற்கு காரணம் ஆளும் கட்சியை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதே முக்கிய காரணமாக இருந்து. மேலும், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்றவர்கள் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.  விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் சத்யராஜ் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார். ஒருபக்கம், அவரின் மகள் திவ்யாவும் திமுகவில் இணைந்து விஜயை விமர்சித்து வந்தார். இந்நிலையில், விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘விஜய்க்கும், தவெக எம்.எல்.எக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பெரியார், அம்பேத்கார் ஆகியோரை தங்கள் கொள்கை தலைவர் என விஜய் சொல்லியிருந்தார். அவர்களின் வழிநின்று ஒரு சிறப்பான சமூக நிதி ஆட்சியை தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எனது அன்பு சகோதரர், திமுக தலைவர் முக ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மையிலேயே மனவேதனையை அளிக்கிறது.

ஆனால், அவர் தோல்வியை கண்டு துவண்டு விழுபவர் அல்ல. கடந்த 5 ஆண்டுகளில் திரு ஸ்டாலின் தலைமையிலான அரசு டெல்லிக்கு அஞ்சாமை என்கிற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை கொண்டுவந்து இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றியதற்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். கடந்த 5 வருடங்களாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தேன். இனிவரும் காலங்களில் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் இன்னும் வலுவாக ஆதரவை தெரிவிப்பேன். அதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
விஜய் எங்க வீட்டு பிள்ளை!. ஆனா சப்போர்ட் பண்ணமாட்டோம்!. பிரேமலதா பேட்டி..