1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. k sengottaiyan answer to admk and dmk

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

sengottaiyan
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் தவெகவுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர். மேலும், எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் அணியில் இருந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.

இதையடுத்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘தவெகவில் எந்த குதிரை பேரமும் நடைபெறவில்லை.. குதிரை பேரம் நடத்தியது யார் என எல்லோருக்கும் தெரியும்.. திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆசைப்பட்டது யார்?..

ராஜினாமா செய்வது அவர்களின் விருப்பம்.. அதை நீங்களும் நானும் முடிவு செய்ய முடியாது.. ஆறு மாதம் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம் அவகாசம் தருகிறோம் என கூறிவிட்டு இப்போது திமுக ஏன் விமர்சிக்கிறது?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சினை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘சட்டம் ஒழுங்கை சரி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் தர வேண்டும்.. குற்றங்கள் நடைபெறும் போது அரசு காவல்துறை மூலம் அதிரடியான நடவடிக்கைகளி எடுத்து வருகிறது. அதிமுகவில் ஜனநாயகம் என்பது இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...