1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind admk mlas moving to tvk

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

eps vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

தவெகவுக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய மூன்றுக்கும் அமைச்சரவையில் தவெக இடம் கொடுத்திருக்கிறது. ஒருபக்கம் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர். மேலும், முதல்வர் விஜய் சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இது போதாது என நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். அநேகமாக அந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரும்போது அவர்கள் தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தவெக குதிரை பேரம் நடத்தி வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின் ஆகியோர் கூறி வருகிறார்கள்.

தவெக எம்.எல்.ஏக்களின் பலம் தற்போது 107ஆக இருக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றால் ஆட்சி கவிழும் அபாயம் இருக்கிறது. எனவேதான் மற்ற கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களை தவெக எம்எல்ஏக்களாக மாற்றினால் தங்களின் பலம் அதிகரிக்கும் என தவெக கணக்கு போடுவதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

அனேகமக அதிமுகவிலிருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு விரைவில் தவெகவில் இணைவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. எப்படியாவது தங்களின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தவெக பல வேலைகளையும் செய்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
About Writer
பாலகிருஷ்ணன்