1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. No Liquor Shops Near Schools and Rs 5 Fish-Rice Meals: West Bengal CM Suvendu Adhikari Announces Mega Schemes

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

மேற்கு வங்க அரசு
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, நதியா மாவட்டத்தின் கல்யாணி பகுதியில் நடைபெற்ற உயர்மட்ட நிர்வாக ஆய்வு கூட்டத்திற்கு பிறகு சாமானிய மக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடியான நலத்திட்டங்களை இன்று அறிவித்துள்ளார்.
 
இதன்படி, மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆன்மீக வழிபாட்டு தலங்களை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இனிமேல் மதுக்கடைகள் இயங்குவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். 
 
மேலும், அம்மாநிலப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 'அன்னபூர்ணா யோஜனா' என்ற புதிய திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மே 27 முதல் தலைமைச் செயலகத்தில் விநியோகிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
இதோடு ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் சுமார் 400 பிரத்யேக உணவகங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வெறும் 5 ரூபாய்க்கு மீன் மற்றும் சாதம்  அடங்கிய மலிவு விலை உணவு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 
 
மேலும், சுகாதாரத் துறையிலிருந்து பிரித்து 'ஆயுஷ்' மருத்துவத்திற்கெனத் தனி அமைச்சகம் மற்றும் துறை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் சுவேந்து அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..