1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
  4. communist shanmugan support tvk vijay

திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...

stalin vijay
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நடிகராக இருந்த விஜய் தற்போது முதலமைச்சராக மாறியிருக்கிறார். அவர் பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வாரங்களில் பல விமர்சனங்கள் தவெக ஆட்சியின் மீது வந்திருக்கிறது.

குறிப்பாக அதிமுக எம்.எல்.ஏக்களை தங்களது ஆதரவாக வாக்களித்து வைத்தது, அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது என பல விமர்சனங்கள் தவெக மீது வந்திருக்கிறது. ஒருபக்கம் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னபடி தவெக செய்யவில்லை என்கிற புகாரும் தற்போது எழுந்திருக்கிறது. ஏற்கனவே எல்லோருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என சொல்லிவிட்டு அது 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என சொன்னது விமர்சனத்திற்குள்ளானது.

அதேபோல் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழே வைத்திருப்பவர்களுக்கு விவசாய கடன் முழுவதும் இலவசம்.. ஐந்து ஏக்கருக்கு மேலே வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதம் இலவசம் என தேர்தல் வாக்குறுதியில் சொன்னது தவெக. ஆனால் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு விவசாயிகளை அதிருப்திக்குள்ளாக்கியது.

இதை அதிமுக, அதிமுக போன்ற கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ‘கடந்த முறை முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றவில்லை. ஐந்தாவது ஆண்டில்தான் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொன்றையும் என்னால் சொல்ல முடியும்.. எந்த ஒரு ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதற்குரிய அவகாசம் தர வேண்டும். அந்த பொறுமை மக்களுக்கு தேவை’ என கூறியிருக்கிறார்.