தொடர்புடைய செய்திகள்
- 4 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியை தோற்கடித்த சசிகலா!.. மாஸ் காட்டிய தென்னந்தோப்பு சின்னம்!..
- சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள்?.. மூன்றாம் இடத்திற்கு போன அதிமுக!...
- எம்.ஜி.ஆரை தாண்டினாலும் அந்த விஷயத்தில் கோட்டைவிட்ட விஜய்!. ஒரு அலசல்!...
- ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி.. சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈபிஎஸ் வெற்றி..!
- எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடையாது.. ஈபிஎஸ் மீது இரண்டாம் கட்ட தலைவர்கள் கோபம்.. மாற்றம் நடக்குமா?
தவெகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம் 3.52 சதவீதம்தான்!.. மு.க ஸ்டாலின் டிவிட்!...
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக வெற்றிக் கழகம் பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. அந்த கட்சி 35.84 சதவீத வாக்களை பெற்று ஆட்சியை பிடிக்கவுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அந்த கட்சி 24.63 சதவீத வாக்குகளை பெற்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.