1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor sanjeev praise cheif minister vijay

முதல்வன் படம் மாதிரி இருக்கு!.. விஜய் எப்பவும் டிரெண்ட் செட்டர்தான்!.. சஞ்சீவ் நெகிழ்ச்சி...

vijay
நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறி தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். கடந்த 10ம் தேதி அவர் முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த 12 நாட்களில் முதலமைச்சராக அவர் பல அதிரடி அதிரடியான செயல்களையும் செய்து காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள், டாஸ்மார்க் கடைகளை மூடுவது, டாஸ்மாக் தொடர்பான முறையாடுகளை தடுப்பது, தவறு செய்யும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது, இதுவரையில் தமிழக அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது, விசிக, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது என பல விஷயங்களை விஜய் செய்து காட்டியிருக்கிறார்..

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய விஜயின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் ‘முதல்வராக விஜய் பொறுப்பேற்று சில நாட்களிலேயே மிக வேகமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறார். முதல்வன் 2 படம் பார்ப்பது போல இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் போல மாறும். உலக தர மருத்துவம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு எல்லாம் சாத்தியமாகும். விமர்சனங்களை தாண்டி தனது விடாமுயற்சி மற்றும் வைராக்கியத்தால் விஜய் இன்று அசைக்க முடியாத ஆலமரமாக உயர்ந்துள்ளார்.. அவர் எப்போதும் ஒரு டிரெண்ட் ஷெட்டர்தான்’ என அவர் கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
முதல்வருக்கு ஒரு போன்தான் போட்டேன்.. இன்ஸ்பெக்டரை மாத்திட்டார்!.. தவெக எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..